சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - தர்மன் சண்முகரத்னம் வெற்றி


சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - தர்மன் சண்முகரத்னம் வெற்றி
x

சிங்கப்பூரின் முன்னாள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முக ரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. அவருக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story