உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.05 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.05 கோடியாக உயர்வு
x

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 58.93 கோடியாக உயர்ந்துள்ளது.



வாஷிங்டன்,



சீனாவின் வுகான் நகரில் முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு பரவலாக தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரசானது, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பி.ஏ. ரக பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56 கோடியே 5 லட்சத்து 28 ஆயிரத்து 84 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 36 ஆயிரத்து 397 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story