இலங்கை நாடாளுமன்றம் வரும் 19ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிப்பு..!


இலங்கை நாடாளுமன்றம் வரும் 19ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிப்பு..!
x
தினத்தந்தி 16 July 2022 6:30 AM GMT (Updated: 16 July 2022 6:31 AM GMT)

இலங்கை நாடாளுமன்றம் வரும் 19ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்ட்டுள்ளது

கொழும்பு,

இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. போராட்டம் முற்றியதில், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் இல்லத்திலும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தவாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்ததால் நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அத்துடன் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அனுப்பி வைத்தார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே (வயது 73) நேற்று முறைப்படி பதவியேற்றார்.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் இன்று நாடாளுமன்றம் இன்று கூடியது .இந்த அமர்வில் ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டது.இதில் இலங்கை நாடாளுமன்றம் வரும் 19ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்ட்டுள்ளது

மேலும் அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்த்துள்ளார். அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ,முன்னாள் அமைச்சர்கள் அநுரயாப்பா அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் போட்டியிட விருப்பம் என கூறப்படுகிறது


Next Story