உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் அணுமின் நிலையம் கடும் சேதம்! ரஷியாவை கடுமையாக விமர்சித்த அதிபர் ஜெலன்ஸ்கி


உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் அணுமின் நிலையம் கடும் சேதம்! ரஷியாவை கடுமையாக விமர்சித்த அதிபர் ஜெலன்ஸ்கி
x

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உலை மூடப்பட்டது.

கீவ்,

உக்ரைன் சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷியப் படைகள் சபோரிஸ்ஷியா ஆலையை ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் ரஷியா மீது குற்றம் சாட்டினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், "உலகில் முதன்முதலாக ரஷ்ய பயங்கரவாதிகள் மின் உற்பத்தி நிலையத்தை பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தினார்கள்" என்றார்.

உக்ரைனும் ரஷியாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் கடுமையான சேதத்தை அடைந்தது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அணுமின் நிலைய தாக்குதலால் அணு உலைகளில் ஒன்று மூடப்பட்டது, மின்கம்பி உடைந்தது, மேலும் ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு ஏற்படுவதான கவலைகளும் எழுந்துள்ளது. அணு உலையில் தீ பற்றும் ஆபத்து இன்னும் கணிசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இந்த தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவை விமர்சித்தது.

ஆனால் ஆலையை கைப்பற்றினாலும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா கூறுகிறது. அணு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படையினர் மீதும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.


Next Story