ரஷிய எல்லைப்பகுதியான பெல்கோரோட் நகரில் துணைமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் - மின் இணைப்பு துண்டிப்பு!


ரஷிய எல்லைப்பகுதியான பெல்கோரோட் நகரில் துணைமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் - மின் இணைப்பு துண்டிப்பு!
x

ரஷியா எல்லை பகுதியான பெல்கோரோட் நகரில் உள்ள துணைமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்த பிராந்தியத்தின் கவர்னர் கூறினார்.

கீவ்,

உக்ரைன் ரஷியா எல்லை பகுதியை ஒட்டியுள்ள ரஷிய பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் ரஷியா எல்லை பகுதியான ரஷியாவின் பெல்கோரோட் நகரில் உள்ள துணைமின் நிலையம் மீது உக்ரைன் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக அந்த பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.

உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்த துணைமின் நிலையம் தீப்பற்றி எரிந்ததன் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் சேதங்கள் சீரமைக்கப்படும் என்று கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

மேலும், உக்ரேனிய ஏவுகணைகள் அங்குள்ள ரெயில் பாதையைத் தாக்கியது மற்றும் பல ரெயில் மின் இணைப்புகளை சேதப்படுத்தியது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்னதாக, இந்த வாரம் ஷெபெக்கினோ நகரில் உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலால் அங்கு மின் இணைப்பு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story