உலகத் தலைவர்களுடன் ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற ரஷியா எதிர்ப்பு!


உலகத் தலைவர்களுடன் ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற ரஷியா எதிர்ப்பு!
x
தினத்தந்தி 15 Sep 2022 3:40 AM GMT (Updated: 15 Sep 2022 3:58 AM GMT)

உலகத் தலைவர்களிடம் ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கீவ்,

உலகத் தலைவர்களிடம் செப்டம்பர் 21ம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பான ஒரு முன்மொழிவை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசீலிக்க உள்ளது.

போர் காரணமாக ஜெலென்ஸ்கி பொதுச் சபைக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க முடியாது என்று உக்ரைன் விவகாரங்களுக்கான ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.ஆனால் உக்ரைனால் உருவாக்கப்பட்ட இந்த உத்தேச முன்மொழிவு முடிவின் மீது வாக்கெடுப்பு நடத்த ரஷியா அழைப்பு விடுக்கும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக, ரஷியாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா புதன்கிழமை கூறியதாவது: "வீடியோ மூலம் ஜெலென்ஸ்கியை பேச அனுமதிப்பதை ரஷியா எதிர்க்கிறது" என்றார்.


Next Story