காஷ்மீர்-இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதி: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!


காஷ்மீர்-இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதி: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
x
தினத்தந்தி 18 Nov 2022 3:33 AM GMT (Updated: 18 Nov 2022 4:23 AM GMT)

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது காஷ்மீர் பிரச்சனையை கிளப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதத்தில் நேற்று ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பேசியது. அப்போது காஷ்மீர் பிரச்சனையை கிளப்பிய பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் கூறியதாவது,

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க இன்று கூடியுள்ளோம். ஆனால் பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் மீது தேவையற்ற குறிப்புகளை செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதிநிதி என்ன நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது.

பாகிஸ்தான் பொய்களை பரப்புகிறது, பலதரப்பு மன்றங்களின் புனிதத்தை துஷ்பிரயோகம் செய்யும் கெட்ட பழக்கம் பாகிஸ்தானிடம் உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் கூட்டு அவமதிப்புக்கு தகுதியானதாக உள்ளது என்று கடும் கண்டனங்களை தெரிவித்தார்.


Next Story