ஜெனிவா: ஜி-33 அமைச்சா்களின் கூட்டத்தில் மத்திய மந்திாி பியூஷ் கோயல் பங்கேற்பு


ஜெனிவா: ஜி-33 அமைச்சா்களின் கூட்டத்தில் மத்திய மந்திாி பியூஷ் கோயல் பங்கேற்பு
x

ஜெனிவாவில் நடைபெறும் ஜி-33 நாடுகளின் அமைச்சா்களின் கூட்டத்தில் மத்திய மந்திாி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளாா்.

ஜெனிவா,

சுவிட்சா்லாந்தில் உள்ள ஜெனிவாவில் ஜி-33 நாடுகளின் அமைச்சா்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் இந்தியா சாா்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திாி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளாா்.அங்கு அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் தய்யை சந்திக்க உள்ளாா்.

வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-33 அமைப்பில் தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவை தவிர சீனா, இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.2003 ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.


Next Story