குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவலா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்


குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவலா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்
x

குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவல் என்பதை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகள் பலவற்றில் 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கானப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மற்றவர்களுக்கு குரங்கு அம்மை பரவ காரணமாக இருக்கிறார்களா? என்பது இதுவரை உறுதியாகவில்லை.

மே மாதத்தில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் குரங்கு அம்மை பரவுவதற்கான அறிகுறி சிறிய அளவிலான காய்ச்சல் மற்றும் உடலில் சிகப்பு புள்ளிகள் தோன்றுவது என்ற அளவிலேயே இருந்துள்ளது.

குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிக அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதிக அளவில் பரவி வருகிறது.

பலரும் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story