ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு ஆதரவாக ஈரான் வீரர்கள் - அமெரிக்கா குற்றச்சாட்டு

ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு ஆதரவாக ஈரான் வீரர்கள் - அமெரிக்கா குற்றச்சாட்டு
x

Image Courtesy: ANI

தினத்தந்தி 20 Oct 2022 7:04 PM GMT (Updated: 20 Oct 2022 7:21 PM GMT)

ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷ்ய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷியாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.

எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர், ஆனால் ரஷிய படைகள் தான் இயக்குகின்றனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

Next Story