ரஷிய ஏவுகணைகள் போலந்தை தாக்கியதில் 2 பேர் பலி என அமெரிக்கா தகவல்


ரஷிய  ஏவுகணைகள் போலந்தை தாக்கியதில் 2 பேர் பலி என அமெரிக்கா தகவல்
x

உக்ரைன் - ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் ரஷிய ஏவுகணைகள் போலந்து நாட்டை தாக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின.

இந்தசூழ்நிலையில், 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ரஷியா, உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ஏவுகணைகளை மழை பொழிந்தது, அதில் உக்ரைன், ஏறக்குறைய ஒன்பது மாதப் போரில் ஏவுகணைத் தாக்குதல்களின் மிகப்பெரிய அலை என்று உக்ரைன் கூறியது.

இந்தநிலையில், ரஷிய ஏவுகணைகள் போலந்துக்குள் நுழைந்து இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு போலந்தில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வெடி குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலந்து தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போலந்து பிரதமர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கக் குழுவின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story