உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்


உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்
x

கோப்புப்படம்

முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மே 8-ந் தேதி அழைப்பு விடுத்தார். அதன்படி அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.

தாஷ்கண்ட்,

உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக ஷவ்கத் மிர்சியோயேவ் பதவி வகித்து வருகிறார். அங்கு அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் 30-ந் தேதியன்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளித்ததால் அதிபர் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும், தேர்தலில் தொடர்ந்து 2 முறைக்கு மேல் போட்டியிடுவதற்கும் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

தற்போதைய அதிபர் மிர்சியோயேவின் பதவிக்காலம் வருகிற 2026-ம் ஆண்டு வரை உள்ளது. எனினும் மக்களின் இந்த முடிவின்படி முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த அவர் மே 8-ந் தேதி அழைப்பு விடுத்தார். அதன்படி அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் மிர்சியோயேவ், மக்கள் ஜனநாயக கட்சியின் உலுக்பெக் இனோயாடோவ் உள்ளிட்ட பலர் போட்டியிட்டு உள்ளனர். அதிபர் பதவிக்காலம் உயர்த்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது அங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story