இந்திய துணை ஜனாதிபதி - செனகல் அதிபா் சந்திப்பு


இந்திய துணை ஜனாதிபதி - செனகல் அதிபா் சந்திப்பு
x

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செனகல் அதிபர் மேக்கி சாலை சந்தித்தாா்.

டக்கர்,

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

துணை ஜனாதிபதி காபோன் நாட்டில் தனது சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு, செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்கு சென்றாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செனகலில் தொழில் துறையினா் மற்றும் இந்திய வம்சாவளியினரோடும் கலந்துரையாடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வருகிற ஜூன் 4- ந்தேதி வரை செனகல் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொள்கிறாா்.

இந்திய-செனகல் நாடுகளின் 60 ஆண்டுகள் தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளாா்.


Next Story