ராணி எலிசபெத்தின் உடலுக்கு அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!


ராணி எலிசபெத்தின் உடலுக்கு அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
x
தினத்தந்தி 15 Sep 2022 7:33 AM GMT (Updated: 15 Sep 2022 7:36 AM GMT)

ராணி எலிசபெத்தின் உடல் மெய்க்காப்பாளர்களால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பால்மோரல் அரண்மனையில் இருந்து நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச் சடங்குகள் வரை உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருக்கும்.இதனையடுத்து ராணி எலிசபெத்தின் உடல் மெய்க்காப்பாளர்களால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு அருகில் கண்காணிப்பில் இருந்த காவலர் மேடையில் இருந்து திடீரென சரிந்து விழுந்தார்.

இதனை கண்டவுடன் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் லட்சக்கணக்கில் குவிந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்த இரண்டு காவலர்கள் உட்பட மேலும் மூன்று பேர் மயக்கமடைந்து கீழே சரிந்த காவலருக்கு ஓடிச்சென்று உதவினர். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story