வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு


வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு
x

வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.

ஹனோய்,

வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதிவரை ஒருவாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள். மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காரணமாக வியட்நாமில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story