"புதின் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்க உளவுத்துறை

Image Courtesy : AFP
சமீப காலமாக புதினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன.
வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதின் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று சென்றார். அங்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்து பேசினார்.
இதற்கிடையில் சமீப காலமாக புதினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவருக்கு புற்று நோய் தீவிரமடைந்து வருவதாகவும் அவரால் அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே வாழ வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் புதினின் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். புதின் உடல்நிலை குறித்து அவர் கூறுகையில்," ஜனாதிபதி புதினின் உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்த வரை அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிகிறது." என தெரிவித்தார்.






