மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ


மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ
x

இந்த வீடியோ வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.

அங்காரா

உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.

ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடந்த மாநாட்டின் போது, உக்ரைன் எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷிய பிரதிநிதியை தாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் 61 வது பொதுச் சபையின் மாநாடு நேற்று நடைபெற்றது. பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூகம் என இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளைப் குறித்த விவாதிக்க மாநாடு கூடியது.இதில் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிவ் போஸ்டின்சிறப்பு நிருபரும் அரசியல் ஆலோசகருமான ஜேசன் ஜே ஸ்மார்ட் இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கிளிப் வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.

உக்ரைன் எம்.பி.மரிகோவ்ஸ்கியும் தனது பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

வக்கீல் இப்ராஹிம் சைடன் என்பவர் தனது டுவிட்டரில் "அவர் உண்மையிலேயே அந்த அடிக்கு தகுதியானவர். அங்காராவில் நடந்த கருங்கடல் பொருளாதார சமூக நிகழ்வில் ரஷ்யா பிரதிநிதி சண்டையிட்டு, எம்பி மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து உக்ரைன் கொடியை வலுக்கட்டாயமாக பறித்தார் என கூறி உள்ளார்.


Next Story