உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு: இந்தியாவுக்கு தலைவர்கள் பாராட்டு


உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு: இந்தியாவுக்கு தலைவர்கள் பாராட்டு
x

கோப்புப்படம்

உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

டாவோஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்து வருகிறது. அதில் நேற்று ஒரு அமர்வில் பேசிய தலைவர்கள் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினர்.

வெல்கம் அறக்கட்டளை இயக்குனர் ஜெரிமி பரார், 'கவி' என்ற தடுப்பூசி கூட்டணி தலைமை செயல் அதிகாரி சேத் பெர்க்லி, மாடர்னா தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

சரியான நேரத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்தி, உலகம் முழுவதும் தடுப்பூசியை வினியோகித்ததாக இந்தியாவுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தடுப்பூசி சமத்துவத்தை உறுதி செய்யவும், அனைவருக்கும் தடுப்பூசி போடவும் இந்திய மாடலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இம்மாநாட்டில் பேசிய 'நிதி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், உலகின் தடுப்பூசி தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என்று கூறினார்.


Next Story