"மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்" மேற்கு நாடுகள் தலைவர்கள் குறித்து புதின் கிண்டல்


மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும் மேற்கு நாடுகள் தலைவர்கள் குறித்து புதின் கிண்டல்
x
தினத்தந்தி 1 July 2022 12:29 PM GMT (Updated: 1 July 2022 12:30 PM GMT)

மேற்கு நாடுகள் தலைவர்கள் மேலாட்டையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும் என தன்னைப்பற்றிய கிண்டலுக்கு புதின் பதிலடி கொடுத்தார்.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் போர் தொடுத்து இருப்பதால், மேற்கு நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து, இந்த தலைவர்கள் கிண்டலடித்தனர். 'புதின் சட்டையின்றி இருப்பது, குதிரை உடம்பு போல் இருக்கிறது,' என்று டிருடேவும், 'நாமும் சட்டையை கழற்றி, புதினை விட பலசாலிகள் என்பதை காட்டுவோமா?' என்று போரிஸ் ஜான்சனும் கூறினர்.

புதினிடம் நேற்று இது பற்றி கேட்டதற்கு, 'மேற்கு நாட்டு தலைவர்கள் உடற்பயிற்சியே செய்வது கிடையாது. நன்றாக சரக்கு அடிப்பார்கள். இடுப்புக்கு கீழோ, மேலோ... துணியின்றி இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர்களை இந்த கோலத்தில் எப்படி பார்த்தாலும் சகிக்காது; அருவெறுப்பாக இருக்கும்,' என்று சிரித்தபடி பதிலடி கொடுத்தார்.


Next Story