லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்


லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2022 12:10 AM GMT (Updated: 22 Jun 2022 12:23 PM GMT)

உக்ரைன் மீது ரஷியா 119-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.


Live Updates

  • 22 Jun 2022 8:11 AM GMT

    கீவ்,

    உக்ரைன் போரில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஆபத்தான பகுதிகளில் இருந்து 21 ஆயிரத்து 662 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்தப் போரில் தன்னார்வலராக கலந்து கொண்டு சண்டையிட்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் ஜபீல்ஸ்கி என்பவர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

    உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவ்வாறு உக்ரைன் செல்லக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், "நான் உக்ரைன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் உக்ரைனியர்களுக்கு மேலும் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

    ஜோ பைடன் உக்ரைன் வர வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 22 Jun 2022 7:58 AM GMT


    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தைக்காக ஈரான் செல்ல உள்ளதாக தகவல்

    மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் இரு நாடுகளும் சிக்கியுள்ள நிலையில் வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று ஈரான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 22 Jun 2022 7:03 AM GMT

    உக்ரைனில் ரஷிய போர்க்குற்றங்களில் தப்பியவர்களை கண்காணிக்க பேஸ் (PACE) தூதுக்குழு.

    சட்ட விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகள் மீதான குற்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஐரோப்பிய கவுன்சிலின் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் உக்ரைனுக்கு வருகை தர திட்டமிடப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் உக்ரைனின் உத்தியின் ஒரு பகுதியே இந்த வருகை என்று கூறப்படுகிறது.

  • 22 Jun 2022 5:55 AM GMT


    உக்ரைனின் டான்பாஸில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் நிர்வாக எல்லைகளை அடைவதற்காக ரஷியப் படைகள் சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் பக்முட் வழியாக தங்கள் ராணுவத்தை தொடர்ந்து குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story