'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் கிடையாது' - ஜின்பிங்கின் பேச்சுக்கு தைவான் பதிலடி


சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் கிடையாது - ஜின்பிங்கின் பேச்சுக்கு தைவான் பதிலடி
x

கோப்புப்படம்

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் கிடையாது என்று ஜின்பிங்கின் பேச்சுக்கு தைவான் பதிலடி கொடுத்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அதிபர் ஜின்பிங் தைவான் விவகாரம் குறித்து காரசாரமாக பேசினார்.

அப்போது அவர், "தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் படை பலத்தை பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம்" என கூறினார்.

இந்தநிலையில் சீன அதிபரின் இந்த பேச்சுக்கு தைவான் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தைவானின் நிலைப்பாடு உறுதியானது. தைவான் அதன் தேசிய இறையாண்மையில் பின்வாங்காது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யாது. தைவான் சுதந்திரமான நாடு. போரை சந்திப்பது தைவானின் விருப்பம் அல்ல. இதுதான் தைவான் மக்களின் ஒருமித்த கருத்து. சீன ஆளும் கட்சியின் மாநாட்டின் முன்னேற்றங்களை தைவானின் தேசிய பாதுகாப்புக் குழு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story