கென்யாவின் 5வது அதிபராக பதவியேற்றார் வில்லியம் ரூட்டோ!

Image Credit:Reuters
கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
நைரோபி,
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5வது அதிபரக பதவியேற்றார்.
இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது.
கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார். இந்த நிலையில் இருவருக்குமிடையே எழுந்த மனக் கசப்பால் ஒருவருக்கொருவர் மாதக் கணக்கில் பேசாமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இருவரும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.






