நீச்சல் குளத்தில் தலைகீழாக நடக்கும் அழகி


நீச்சல் குளத்தில் தலைகீழாக நடக்கும்  அழகி
x
தினத்தந்தி 5 Sep 2022 10:40 AM GMT (Updated: 2022-09-05T16:11:59+05:30)

ஒரு அழகி நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்டினா மகுஷென்கோ நீச்சலில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தற்போது இவரது வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. வீடியோவில் மகுஷென்கோ ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து குளத்தில் தலைகீழாக நடக்கிறார். அவர் 360 டிகிரி சுழன்று நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக நடக்கிறார்.வீடியோவை கிறிஸ்டிமகுஷா என்ற இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ 5.5 கோடி அதிகமான பார்வைகளையும் 17 லட்சத்திற்கு அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது

இவர் இன்ஸ்டாகிராமில் 600,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களையும், டிக்டாக்கில் 12 லட்சம் அதிகமான பின்தொடர்பவர்களையும் பெற்றுள்ளார்.
Next Story