சீன அதிபராக ஜின்பிங் 3வது முறையாக தேர்வு..!


சீன அதிபராக ஜின்பிங் 3வது முறையாக தேர்வு..!
x
தினத்தந்தி 23 Oct 2022 4:34 AM GMT (Updated: 23 Oct 2022 5:44 AM GMT)

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்


சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.. இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. .ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது.

ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும் ,அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார்


Next Story