தேர்தல் முடிவுகள் வெளியீடு: மீண்டும் ஜிம்பாப்வே அதிபர் ஆனார் எம்மர்சன்


தேர்தல் முடிவுகள் வெளியீடு: மீண்டும் ஜிம்பாப்வே அதிபர் ஆனார் எம்மர்சன்
x

தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி எம்மர்சன் மீண்டும் அதிபர் ஆனார்.

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24-ந்தேதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் 44 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். எனினும் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதாக கருதி இந்த முடிவினை அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.


Next Story