மார்கழி மாதத்தில் மாலவனை வழிபடுவோம்!


மார்கழி மாதத்தில் மாலவனை  வழிபடுவோம்!
x
தினத்தந்தி 22 Dec 2016 6:53 AM GMT (Updated: 22 Dec 2016 6:53 AM GMT)

மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் 'மாதங்களில் நான் மார்கழி' என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள். 'வைகுண்ட ஏகாதசி' என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத்திறப்பார்கள். ஆண்டுமுழுவதும் அடைத்து வைத்தி

மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் 'மாதங்களில் நான் மார்கழி' என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.

'வைகுண்ட ஏகாதசி' என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத்திறப்பார்கள். ஆண்டுமுழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும். ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது.

ஸ்ரீரங்கம், ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் நுழைய லட்சக்கணக் கான மக்கள் காத்திருப்பர். அதே போல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பியிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும் பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.

பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை  'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கின்றோம். அவருக் காக கட்டிய கோவிலைப் 'பெருமாள் கோவில்' என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை அனுபவத்தில் காணலாம்.

'காக்கும் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் என்று சொல்வார்கள்.

 1. விஷ்ணு, 2. நாராயணன், 3. கோவிந்தன், 4. மதுசூதனன், 5. ஜனார்த்தனன், 6. பத்மநாபன், 7. ப்ரஜாபதி, 8, வராகன், 9. சக்ரதாரி, 10. வாமணன், 11. மாதவன், 12. நரசிம்மன், 13. திரிவிக்ரமன்,  14. ரகுநாதன், 15. ஜலசாயினன், 16. ஸ்ரீதரன்.


பதினாறு பெயர்களுக்கும் சொந்தக்கரராகி, நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை மார்கழி 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (8.1.2017) வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'வைகுண்ட ஏகாதசி' என்று பெயர்.

ஏகாதசியன்று அவல் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்து சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமி நாசிணியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.

இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 'ஓசோன்' காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது பதிவதால் ஆரோக்கியம் மேம்படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஆண்டாள், விஷ்ணுவை  வழிபட்ட 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக' மாறியதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். எனவே திருப்பாவை பாடி தெய்வீக பக்தியை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதி  காலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.

விஷ்ணுவை வழிபட்டு அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை அளிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார்.

அஷ்டலட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமி படத்தோடு இணைத்து பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!

இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!

மன்றாடிக் கேட்கின்றோம் வருவாய் இதுசமயம்.

என்று லட்சுமியின் சன்னிதியில் சமயமாலை பாடினால் இமயம்போல் வாழ்வு உயரும்.

அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும்.

Next Story