ஏகாதசிகளும்.. அதன் பலன்களும்..


ஏகாதசிகளும்.. அதன் பலன்களும்..
x
தினத்தந்தி 3 Jan 2017 3:15 AM GMT (Updated: 2 Jan 2017 2:01 PM GMT)

ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் உண்டு. அவை முறையே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை), சுக்லபட்சத்தில் (வளர்பிறை) வரும். சில ஆண்டுகள் ஓர் ஏகாதசி அதிகமாக வரலாம். அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள். மேற்கண்ட 25 ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இவற்றில் சிறப்பு வாய்ந்தது

ண்டுக்கு 24 ஏகாதசிகள் உண்டு. அவை முறையே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை), சுக்லபட்சத்தில் (வளர்பிறை) வரும். சில ஆண்டுகள் ஓர் ஏகாதசி அதிகமாக வரலாம். அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள். மேற்கண்ட 25 ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இவற்றில் சிறப்பு வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி என்பதாகும்.

சித்திரை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாபமோசனிகா’ என்று அழைக்கப்படு கிறது.

சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை ‘காமதா’ என்கிறார்கள்.

வைகாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ‘வருதிநீ’ எனப்படும்.

வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியை, ‘மோஞனீ’ என்பார்கள்.

ஆனி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது ‘அபரா’ ஏகாதசியாகும்.

ஆனி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி ‘நிர்ஜலா’ என்றழைக்கப் படும்.

ஆடி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது ‘யோகினி’ ஏகாதசியாகும்.

ஆடி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி ‘சயனி’ என்று அழைக்கப்படுகிறது.

ஆவணி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை ‘காமிகா’ என்பார்கள்.

ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வருவது ‘புத்ரஜா’ ஏகாதசியாகும்.

புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ‘அஜா’ எனப்படும்.

புரட்டாசி மாதம் சுக்லபட்சத்தில் வருவது ‘பத்மநாபா’ ஏகாதசியாக உள்ளது.

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ‘இந்திரா’ ஏகாதசி   என்றழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதம் சுக்லபட்சத்தில் வருவது ‘பாபங்குசா’ ஏகாதசியாகும்.

கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ‘ரமா’ ஏகாதசி எனப்படும்.

கார்த்திகை மாதம் சுக்லபட்சத்தில் வருவது     ‘ப்ரபோதினி’ ஏகாதசியாகும்.

மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை ‘உற்பத்தி’ என்றழைப்பார்கள்.

மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வருவது ‘மோட்ச’ (வைகுண்ட) ஏகாதசி எனப்படுகிறது.

தை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியானது ‘ஸபலா’ எனப்படும்.

தை மாதம் சுக்லபட்சத்தில் வருவது ‘புத்ரதா’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

மாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை ‘‌ஷட்திலா’ என்கிறார்கள்.

மாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியானது ‘ஜயா’ எனப்படுகிறது.

பங்குனி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது ‘விஜயா’ ஏகாதசி என்றழைக்கப்படும்.

பங்குனி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஆமலதி’ எனப்படும்.

அம்பரி‌ஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார். வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரி‌ஷனை கொல்வதற்கு ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது. மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். அவர்களோ, ‘நாங்கள் பக்தர் களுக்கு அடிமை. என் இதயம் பக்தர்கள் வசம் உள்ளது. எனவே நீ அம்பரி‌ஷனிடமே போய் மன்னிப்பு கேள்’ என்று கூறினர். முடிவில் துர்வாசர் மன்னனிடமே சென்று மன்னிப்பு கேட்டார். மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச முனிவரை காப்பாற்றினான். துர்வாசர் மன்னனுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார்.

Next Story