சுகப்பிரசவம் அருளும் அம்மன்


சுகப்பிரசவம் அருளும் அம்மன்
x
தினத்தந்தி 20 Jan 2017 1:45 AM GMT (Updated: 19 Jan 2017 12:37 PM GMT)

திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீழக்கல்லூர்.

திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீழக்கல்லூர். இங்கு புரவுவரிநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்குப் பொதுவாக, அவர்கள் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்பட்டுப் பொருள் வளம் அதிகரிக்கும். இங்கு வந்து வழிபட்டுப் பயனடைந்தவர்கள் இங்கிருக்கும் அரசிறை மேடையில் தாங்களாகவே மனம் மகிழ்ந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களையோ அல்லது அதற்கு இணையான லாபத்தின் ஒரு பகுதியையோ இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வளமடைகின்றனர். வரிப்பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்களுடைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுகிறதாம்.

இத்தலத்திற்கு வந்து வழிபடும் வங்கி, காப்பீடு, வருவாய் மற்றும் நிதி நிறுவனப் பணிகளில் இருப்பவர்கள் தகுந்த பதவி உயர்வினையும், நிதி தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள், கணக்காளர் பணிகளில் இருப்பவர்கள் தங்களுடைய தொழிலில் நல்ல வளர்ச்சியையும் பெற முடியும்.

இக்கோவிலில் இருக்கும் அழகாம்பிகை அம்மன் தெற்கு நோக்கிப் பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்புடையதாகும். இந்த அம்மனுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு என மங்களப் பொருட்களை அணிவித்து வழிபாடு செய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகமான குழந்தைப் பிறப்பு கிடைக்கும். திருமணம் முடிந்து நீண்டகாலமாகக் குழந்தை இல்லாமலிருப்பவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். இதுபோல், நீண்ட காலமாகத் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் இங்குள்ள அம்மனை வழிபடும் பக்தர்  களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Next Story