ஆன்மிகம்

புகுந்த வீட்டிற்கு யோகம் வர.. + "||" + House The Bring yoga

புகுந்த வீட்டிற்கு யோகம் வர..

புகுந்த வீட்டிற்கு யோகம் வர..
இடது கையால் வேலை செய்யும் குழந்தைகளை, பெரியவர்கள் கண்டிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வலது கையால் எடுத்து வை என்பார்கள்.
வலது பக்கத்தால்செய்யக் கூடிய காரியங்கள் வெற்றி பெறும் என்பதே இதற்கு காரணம்.

‘மணமகளே மணமகளே வா! வா! உன்

வலதுகாலை எடுத்து வைத்து வா! வா!’ என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளின் மூலம் வலது பக்கத்தின் பெருமையை நாம் அறிந்து கொள்ளலாம். மணமகள் புகுந்த வீட்டிற்கு நுழையும் பொழுது, வலது காலை எடுத்து வைத்துச் சென்றால் வாழ்வில் எல்லா வளங்களையும் காண இயலும்.


பொதுவாக, வீட்டிற்குள் நுழையும் பொழுது, வலது கால் வைத்துச் செல்ல வேண்டும் என்பது மரபாகும். இவ்வாறு செய்யத் தவறினால் செல்பவர்களுக்கும், வீட்டுக்காரர்களுக்கும் துன்பம் ஏற்படலாம் என்பது நம்பிக்கை. மனித உடலில் வலது பாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் வலது பக்கத்திற்கு மிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். வலது பக்கம் திரும்பி, படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். வலது கால் வைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வலது கையால் உணவருந்த வேண்டும். வலது கையால் பிறருக்கு உணவளிக்க வேண்டும். இது போன்ற பல செயல்களுக்கு வலது பக்கத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.