திருவாரூர் மாவட்டம் திரு மாகாளம் என்ற ஊரில் உள்ளது மகாகாளநாதர் கோவில்.
திருவாரூர் மாவட்டம் திரு மாகாளம் என்ற ஊரில் உள்ளது மகாகாளநாதர் கோவில். இந்த ஆலயம் நாகதோஷம், ராகு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களையும் போக்கும் தலமாக திகழ் கிறது. அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவர் தொழில் அபிவிருத்தி, திருமண வரம், கல்விச் செல்வம் உள்ளிட்ட பல்வேறு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் எலுமிச்சைப் பழ மாலை மற்றும் சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருவாரூரில் இருந்து 22 கிலோமீட்டரில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருமாகாளம் திருத்தலத்தை அடையலாம்.
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.