பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?
ஆண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளலாம். ராகு, கேதுக்கள், புதன், சனி ஆகியவற்றின் ஆதிக்க நாட்களிலும் எண்கணித அடிப்படையில் திருமணத் தேதிகள் அமையுமேயானால் தம்பதியருக்குள் தகராறுகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உருவாகும். நிம்மதி குறையும். நிகழவேண்டிய சுபகாரியம் தாமதப்படும். குழந்தைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும். எனவே மண்டபத்திற்கேற்ற நாள் பார்ப்பதை விட நமக்கு ஏற்ற நாளில் மண்டபம் அமைவதை மேற்கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும். இருமனம் இணையும் திருமணத்தால் பெருமைகள் வந்து சேரும். இல்லையேல் மறுமாங்கல்ய பூஜை மூலமே மன மகிழ்ச்சி அடைய முடியும்.
கடன் சுமை குறைய..
ஒரு சிலர் அப்போதைக்கப்போது கடன் வாங்கிக் கொள்வர். பிறகு பணம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவர். ஒரு சிலருக்கோ ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி சங்கிலித் தொடர்போல கடன்சுமை ஏற்படும் வாய்ப்பு கிட்டும்.
அதற்கு காரணம், ஜாதகத்தில் 6–ம் இடத்தின் ஆதிக்கம் தான். லக்னாதிபதியும், 6–ம் இடத்திற்கு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தொடர்ந்து கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட தாராபலம் பெற்ற நாளில், தனாதிபதிக்குரிய தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்சுமை குறையும்.

Related Tags :
Next Story