ஆன்மிகம்

ராகுவைப் பற்றிய ரகசியங்கள் + "||" + The secrets of Rahu

ராகுவைப் பற்றிய ரகசியங்கள்

ராகுவைப் பற்றிய ரகசியங்கள்
மனிதத் தலையும் பாம்பு உடம்பும் கொண்டவர் ராகு பகவான்.
ராகுவிற்கு உகந்த கிழமை - சனிக்கிழமை
உகந்த நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி
பிடித்தமான மலர் - மந்தாரை
விரும்பும் சமித்து - அருகு
உரிய ரத்தினம் - கோமேதகம்
அதிதேவதை -பத்திரகாளி, துர்க்கை
உச்ச வீடு - விருச்சிகம்
நீச்ச வீடு - ரிஷபம்
காரக அம்சம் - யோகம்
விரும்பும் தான்யம் - உளுந்து
பிடித்த உலோகம் - கருங்கல்
விரும்பும் வாகனம் - ஆடு
மனைவியின் பெயர் - கிம்ஹிசை
உரிய திசை - தென்மேற்கு
பிடித்த சுவை - புளிப்பு
காலம் - ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு, 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

ராகு-கேதுவிற்கான துதிப்பாடல்!

சர்ப்ப கிரகமாய் தணியில் வந்து
சந்தோஷத்தை வழங்கும் அரவே
ஒப்பற்ற நிலையை நாங்கள் பெறவும்
உள்ளம் மகிழும் வாழ்வைத் தரவும்
நற்பலன் கொடுக்கும் ராகு கேதுவே!
நாளும் உன்னைத் துதிக்கின்றோமே!
எப்பொழுதும் நீ எமக்கு அருள்க!
இதயம் மகிழும் வாழ்க்கையைத் தருக!


நலம் யாவும் வழங்கும் நவக்கிரக துதி


நவக்கிரகங்களின் சன்னிதியில் இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.

சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!