விருந்து சொல்லும் தத்துவம் - ஆன்மிக துளிகள்


விருந்து சொல்லும் தத்துவம் - ஆன்மிக துளிகள்
x
தினத்தந்தி 14 Aug 2017 10:45 AM GMT (Updated: 14 Aug 2017 9:25 AM GMT)

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் விருந்து என்பது முக்கியமான இடத்தைப் பிடிக்கக் கூடியது. அந்த விருந்தில் வைக்கப்படும் ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றை இங்கே காணலாம்.

உப்பு, ஊறுகாய்:- குறைவாக வைப்பதுபோல் கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கூட்டு:- உறவினர் களுடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

சாம்பார்:- சாதத்தில் கலந்து ருசி தருவது போல், நாம் உற்றார், உறவினர்களுடன் சேர்ந்திருந்து பலன் பெற வேண்டும்.

அப்பளம்:- இதை நொறுக்குவது போல தீமைகளை, தீய எண்ணங்களை நொறுக்க வேண்டும்.

வறுவல்:- முதலில் எண்ணெயில் போட்டதும் சப்தமிடும். பொறிந்ததும் சத்தம் அடங்கிவிடும். அதுபோல மனிதர்கள் முதலில் இளமையில் ஆரவாரமும், ஆர்ப்பாட்டமும் கொள்கிறார்கள். அனுபவம் வந்த பிறகு அடங்கிவிடுகிறார்கள்.

பாயசம்:- இனிப்பான வாழ்வை அமைத்துக் கொள்வதே உன் லட்சியமாக இருக்க வேண்டும்.

இலை:- எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அடித்தளமாக அமைவது ‘இலை’ தான். இலைபோட்டு விருந்து வைக்க வேண்டும். காரணம் யார் வந்து உதவி கேட்டாலும் இல்(லை) என்று சொல்லாதிருக்க இலையைப் போட்டு அறிவிக்கின்றோம்.

தட்டு:- விருந்தினருக்கு தட்டு வைத்துப் பரிமாறக்கூடாது. தட்டுப்பாடு வந்துவிடும். ஆனால் புதிய தட்டுகள் வாங்கி வைத்திருந்து பரிமாறலாம். சாப்பிட்டு முடிந்ததும் அவர்களுக்கே அந்தத் தட்டைக் கொடுப்பதும் நல்லது.

இன்பத்தை தரும் மணி விழா

அறுபது வயதான தம்பதியர்கள், மணிவிழா செய்து கொள்வது வழக்கம். அவர வர்களின் ராசிக்கேற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர். சிலர் ஆலயங்களில் செய்து கொள்வர். அங்ஙனம் செய்து கொள்பவர்கள் சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால், ஆயுள் நீடிப்பு உண்டு என்கிறார்கள். ‘கடம்’ என்றால் ‘குடம்’ என்று பொருள். அமிர்த குடத்தை அருளியவர் அமிர்தகடேஸ்வரர். அம்பிகை அபிராமி அம்மன் ஆவார்.

‘என்றும் பதினாறு’ என்ற வரம் பெற்ற மார்க்கண்டேயன் உயிரைக் காக்க இறைவன் திருவிளையாடல் நடத்திய தலம் இது. அபிராமி பட்டருக்காக அமாவாசையன்று, முழுநிலவு வந்ததும் இந்த திருத்தலத்தில் தான். பெருமை பெற்ற திருத் தலத்தில் மணிவிழா செய்து கொண்டால், தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து மகிழ்ச்சியை பெருக்கும்.

Next Story