இந்த வார விசேஷங்கள் : 21-11-2017 முதல் 27-11-2017 வரை


இந்த வார விசேஷங்கள் : 21-11-2017 முதல் 27-11-2017 வரை
x
தினத்தந்தி 21 Nov 2017 7:00 AM IST (Updated: 20 Nov 2017 8:06 PM IST)
t-max-icont-min-icon

21-ந் தேதி (செவ்வாய்) ரம்பா திருதியை. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கீழ்நோக்கு நாள்.

22-ந் தேதி (புதன்)

   
சதுர்த்தி விரதம்.
   
திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற் சவம்.
  
 திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
   
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
   
தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
   
கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வியாழன்)

   
முகூர்த்த நாள்.
   
திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
   
திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, இரவு அதிகார நந்தியில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்பா ளும் பவனி வருதல்.
   
பழனி மலை முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக் கம்.
   
மேல்நோக்கு நாள்.

24-ந் தேதி (வெள்ளி)

   
முகூர்த்த நாள்.
   
சஷ்டி விரதம்.
   
திருவோண விரதம்.
   
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் கார்த் திகை உற்சவம் ஆரம்பம்.
   
திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்தில் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் இறைவன் வீதி உலா.
   
உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
   
மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (சனி)


   
திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் காலை பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா, இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத் திலும் பவனி.
   
சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி வரும் காட்சி.
   
பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
   
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
   
மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (ஞாயிறு)

   
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
   
பழனி பாலதண்டாயுதபாணி புறப்பாடு கண்டருளல்.
   
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அன்ன வாகனத் தில் பவனி வருதல்.
   
திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் காலை சேஷ வாகனத்தில் இறைவன் வலம் வருதல், இரவு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி யும், காமதேனு வாகனத்தில் அம்மனும் பவனி வரும் காட்சி.
   
மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (திங்கள்)

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

    திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் காலை விருட்ச வாகனத்திலும், இரவு பெரிய விருட்ச வாகனத்திலும் வீதி உலா.

    திருவெண்காடு, திருக்கழுக் குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங் களில் 1008 சங்காபிஷேகம்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொலு தர்பார் காட்சி.
   
மேல்நோக்கு நாள்.

Next Story