ஆன்மிகம்

வாயுபுத்திரன் தரும் பலன் + "||" + Benefit will vayuputtiran

வாயுபுத்திரன் தரும் பலன்

வாயுபுத்திரன் தரும் பலன்
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.
 அனுமனுக்கு, வெண்ணெய் சாத்தி வழிபடுவதால், பக்தர்களின் கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகும் என்பது ஐதீகம்.

 சனிக்கிழமைகளில் வெற்றிலையை மாலையாக கட்டி, ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதுடன், அனுமன் கவசம் படித்து வந்தால் எதிரிகள் பயம் நீங்கும்.

 அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்தால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

 துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

 அனுமனை சனிக்கிழமை தோறும் வணங்கி வருவதால், புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.

 எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாத்தி அனுமனை வழிபாடு செய்யலாம்.