பாபா கோவில்களில் சீரடி சாய்பாபா பிறந்தநாள் விழா


பாபா கோவில்களில் சீரடி சாய்பாபா பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 25 March 2018 11:00 PM GMT (Updated: 25 March 2018 10:11 PM GMT)

சீரடி சாய்பாபா ராமநவமி அன்று தான் அவதரித்ததாக கூறி உள்ளார். நேற்று ராமநவமி கொண்டாடப்பட்டதை ஒட்டி மயிலாப்பூரில் உள்ள பாபா கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

சென்னை,

காலை 5 மணிக்கு பாபாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பாலாபிஷேகம், தேன், சந்தனம், தயிர் மற்றும் பழங்களால் ஆன ருத்திராபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்பு மகா தீபாராதனை நடந்தது. இரவில், பாபா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். ஏராளமானோர் பக்தியுடன் பாபாவை வழிபட்டனர்.

இதற்கிடையே ‘பாபா மகா சமாதி தகவல்கள்’, ‘குரு பூர்ணிமா தகவல்கள்’, ‘வியப்பை தரும் துறவி சீரடி சாய்பாபா’, ‘பக்தர்களின் அனுபவங்கள்’ ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் ஆகியோர் புத்தகங்களை வெளியிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல் புரசைவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாபா கோவில்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

Next Story