ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் கதக்


ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் கதக்
x
தினத்தந்தி 2 May 2018 10:03 AM GMT (Updated: 2 May 2018 10:03 AM GMT)

கலை, பண்பாடு, கலாசாரம், ஆன்மிகம் மற்றும் தொழில் துறைகளில் தனக்கானதொரு பாரம்பரியத்தை கொண்டு விளங்குவது, கதக் மாவட்டம்.

கதக் மாவட்ட பகுதியை கல்யாண சாளுக்கியர், விஜயநகர பேரரசர் என பலர் ஆட்சி புரிந்துள்ளனர். மேலும் சாளுக்கிய மன்னர்களால் இங்கு ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளதால், ஆன்மிகத்தில் சிறப்புக் குரிய தலமாக இது விளங்குகிறது. இங்குள்ள வீர நாயண்ணா கோவில், உப்பள்ளியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ளது. பண்டைய நினைவு சின்னங்களில் ஒன்றாக போற்றப்படும் இந்தக்கோவில் விஷ்ணுவுக்காக கட்டப்பட்டது. இந்த கோவிலின் கோபுரம், உள்மண்டபம், சன்னிதி ஆகியவை சாளுக்கியர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றுகிறது. இதேபோல் இங்கு ஆன்மிகத்திற்கு பெயர்போன லக்குந்தி பகுதி உள்ளது. இங்கு காசி விஸ்வேஸ்வரர் கோவில், சூரிய கடவுளுக்கு என ஒரு கோவில் ஆகியவையும் இருக்கிறது. மேலும் கதக்கில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்ட தம்பலா கோவில் உள்ளது. 

Next Story