ஆன்மிகம்

குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் 21-ந் தேதி தேரோட்டம் + "||" + Gunaseelam Perumal temple Brahmotsavam Festival Start Today The course on 21st

குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் 21-ந் தேதி தேரோட்டம்

குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் 21-ந் தேதி தேரோட்டம்
குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருச்சி,

திருச்சி மாவட்டம், குண சீலம் பிரசன்ன வேங்கடா சலபதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு பகவத் பிரார்த்தனையும், இரவு 7.15 மணிக்கு புண்யாக வாசனமும், இரவு 8 மணிக்கு மிருத்சங்கரஹணம், இரவு 8.30 மணிக்கு அங்குரார்ப்பணம், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) 9.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலை, இரவு நேரங்களில் சாமி புறப்பாடு மற்றும் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 14-ந்தேதி காலை சாமி புறப்பாடும், இரவு 7.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா வருகிறார்.


வருகிற 16-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்திலும், 17-ந்தேதி இரவு 7.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், 18-ந்தேதி யானை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மூலவர் முத்தங்கி சேவையில் காலை 9 மணி முதல் சாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு புஷ்ப வாகனத்திலும், 20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனத்திலும் சாமி எழுந்தருள்கிறார்.

20-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி வெண்ணை தாழி கிருஷ்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

வருகிற 21-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். 22-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆராதனை, திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது. வருகிற 23-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதியுடன் விழா முடிவடைகிறது. விழாவையொட்டி சாமி கண்ணாடி அறையிலும் தினமும் இரவு காட்சியளிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.