குருப்பெயர்ச்சி பாதசார விவரம்


குருப்பெயர்ச்சி பாதசார விவரம்
x
தினத்தந்தி 25 Sep 2018 8:08 AM GMT (Updated: 25 Sep 2018 8:08 AM GMT)

நன்மை பெறும் ராசிகள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையைப் பெறும் ராசிகள்: ரி‌ஷபம், கடகம், மீனம்

குரு தன பஞ்சமாதிபதியாகி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தனவரவில் திளைக்கும் ராசி: விருச்சிகம்.

குரு பார்வை ‘தன’ ஸ்தானத்தில் பதியும் ராசிகள்: மே‌ஷம், மிதுனம், கும்பம்.

வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக்காண வேண்டிய ராசிகள்: மே‌ஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம்.

வக்ர காலம் மற்றும் அதிசாரம்


விருச்சிக ராசியில் சஞ்சரிக் கும் குருவின் வக்ர காலம் மற்றும் அதிசாரம் விவரம் வருமாறு:

13.3.2019 முதல் 18.5.2019 வரை தனுசில் குரு (அதிசாரம்)

இதற்கிடையில் 10.4.2019 முதல் தனுசு ராசிக்குள் குரு வக்ரமும் அடைகின்றார்.

19.5.2019–ல் குரு மீண்டும் வக்ர கதியில் விருச்சிக ராசிக் குள் வருகின்றார்.

அங்கு 7.8.2019–ல் விருச்சிக குரு வக்ர நிவர்த்தியாகின்றார்.

28.10.2019–ல் தனுசு ராசிக் குள் குருப்பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

பாதசார விவரம்

4.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் 4–ல் குரு பகவான் (குரு சாரம்)

21.10.2018 முதல் 19.12.2018 வரை அனு‌ஷ நட்சத்திரக் காலில் குரு (சனி சாரம்)

20.12.2018 முதல் 12.3.2019 வரை கேட்டை நட்சத்திரக் காலில் குரு (புதன் சாரம்)

13.3.2019 முதல் 17.5.2019 வரை மூலம் நட்சத்திரக் காலில் குரு வக்ரம் (கேது சாரம்)

18.5.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரக் காலில் குரு  (புதன் சாரம்) இடையில் வக்ரம்.

28.10.2019 முதல் தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

குருப்பெயர்ச்சி காலத்தில் வரும் ராகு–கேது பெயர்ச்சி!

குருவின் விருச்சிக ராசி சஞ்சார காலத்தில் ராகு–கேதுக்களின் பெயர்ச்சியும் நடைபெற இருக்கின்றது. 13.2.2019 அன்று கடக ராசியில் இருக்கும் ராகு, மிதுன ராசிக்குச் செல்கின்றார். மகர ராசியில் இருக்கும் கேது, தனுசு ராசிக்குச் செல்கின்றார். ‘மிதுன ராகு, தனுசு கேது’ வாக சஞ்சாரம் செய்கின்றார்கள்.

Next Story