அறிவாற்றல் அளிக்கும் புத ஆதித்ய யோகம்


அறிவாற்றல் அளிக்கும் புத ஆதித்ய யோகம்
x
தினத்தந்தி 28 March 2019 10:00 PM GMT (Updated: 28 March 2019 12:44 PM GMT)

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும்.

புத ஆதித்ய யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Next Story