ஒரே பீடத்தில் முருகன்
பழமுதிர்சோலையில் நடுச்சன்னிதியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். கல் விக்கிரகம். அறுபடை வீடுகளில் வள்ளி, தெய்வானையுடன் ஒரே பீடத்தில் திருமுருகன் காட்சியளிப்பது இங்கு மட்டும் தான் என்று சொல்லுகிறார்கள்.
அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டும் தான். இங்கு எல்லா விதமான அபிஷேகமும் முருகனின் கையிலுள்ள வேலுக்கே நடத்தப்படுகிறது.
ஆண்டார்குப்பத்தில் முருகப்பெருமானுக்கு மயிலுடன் சிம்ம வாகனமும் உள்ளது. தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன் இங்கே முருகன் அருளுகிறார். இந்த சிம்ம வாகனமும் மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவாவினன்குடி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திரு-மகாலட்சுமி, ஆ-காமதேனு, இனன்-சூரியன், கு-பூமிதேவி, டி-அக்னி பகவான் ஆகிய ஐவரும் இத்தலத்தில் முருகப்பெருமானை வழிபட்டதால் திருவாவினன்குடி எனப் பெயர் பெற்றது.
வலதுபுறம் லட்சுமி
பொதுவாக லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தமது இடதுமடியில் அமர வைத்திருப்பார். ஆனால் கடலூர் அருகே உள்ள திருவஹிந்தபுரம் தலத்தில் நரசிம்மர், தனது வலது தொடையின் மீது லட்சுமியை அமர்த்தியபடி அருள்பாலிக்கிறார்.
மூன்று பாவங்களில் சிவன்
கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் சிவபெருமான், காலை 4 மணி முதல் 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், 8 மணி முதல் 12 மணி வரை கிராதமூர்த்தியாகவும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் குடும்ப சமேதராக சாம்ப சதாசிவ ரூபத்தில் காட்சியளிக்கிறார்.
Related Tags :
Next Story