சமூக அந்தஸ்து தரும் சச யோகம்


சமூக அந்தஸ்து தரும் சச யோகம்
x
தினத்தந்தி 26 April 2019 6:13 AM GMT (Updated: 26 April 2019 6:13 AM GMT)

பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் என்பது,

அனைவரையும் தனது பார்வை பலத்தால் கட்டுப்படுத்தி வைக்கும் அசுப கிரகமான சனியால் ஏற்படும் சுப யோகம் ஆகும். ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள். மத்திய அளவில் உயரம், கருப்பான நிறம் கொண்ட இவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆயுள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், தன்னை நம்பியவர்களுக்காக உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள் ஆவர்.

Next Story