இந்த வார விசேஷங்கள் : 28-5-2019 முதல் 3-6-2019 வரை


இந்த வார விசேஷங்கள் : 28-5-2019 முதல் 3-6-2019 வரை
x
தினத்தந்தி 28 May 2019 8:31 AM GMT (Updated: 28 May 2019 8:31 AM GMT)

28-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* அக்னி நட்சத்திரம் முடிவு.

* தத்தாத்ரேயர் ஜெயந்தி.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்மை நடைபெறும்.

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (வியாழன்)

* சர்வ ஏகாதசி.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் மாளிகைக்கு எழுந்தருளல்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* சமநோக்கு நாள்.

31-ந் தேதி (வெள்ளி)

* பிரதோஷம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் ஊர்வலம்.

* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.

* இன்று மாலை அனைத்து சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (சனி)

* மாத சிவராத்திரி.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்மை நடைபெறும்.

* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (ஞாயிறு)

* போதாயன அமாவாசை.

* கார்த்திகை விரதம்.

* திருநெல்வேலி கயிலாசபுரம் கயிலாயநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

* திருநெல்வேலி புட்டாபுரத்தி அம்மன் கோவில் விழா தொடக்கம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

* வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்கரதக் காட்சி.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (திங்கள்)
       

* அமாவாசை.

* அமாசோமவாரம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் உற்சவம் தொடக்கம்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சிவகாசி விஸ்வநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

* மேல்நோக்கு நாள்.

Next Story