இந்த வார விசேஷங்கள் : 25-6-2019 முதல் 1-7-2019 வரை

25-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபமும் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)
* சுமார்த்த ஏகாதசி.
* திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் மாதுர் பூதேஸ்வரர் பூஜை.
* திருப்போரூா் முருகப்பெருமான் ஆலயத்தில் அபிஷேகம், ஆராதனை.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)
* வைஷ்ணவ ஏகாதசி.
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், விராலிமலை முருகன் புறப்பாடு கண்டருளல்.
* வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்கரதக் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)
* பிரதோஷம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் வீதி உலா.
* இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
Related Tags :
Next Story