அத்திவரதர் : வண்ண.. வண்ண.. பட்டாடை
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.
முதல் 31 நாட்கள் சயன (படுத்த) நிலையில் அருள் பாலித்த அவர், அடுத்த 17 நாட்கள் நின்ற நிலையில் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். பட்டுக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் அத்திவரதர் அவதரித்துள்ளதாலோ என்னவோ, அவருக்கு வண்ண வண்ண பட்டு ஆடைகள் நிறைய நன்கொடையாக வருகின்றன. 10 முழம் நீளத்தில் வேட்டியும், 6 முழம் நீளத்தில் அங்கவஸ்திரமும் பல வண்ண நிறங்களில் தினமும் வருகின்றன.
பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வரும் பட்டு ஆடைகள் உடனடியாக, அலங்கார பிரியரான அத்திவரதருக்கு உடுத்தப்படுகிறது. அதனால், அவர் வண்ண வண்ண பட்டு ஆடையில் ஜொலித்து வருகிறார். ஒரு சில நாட்களில் 2 பட்டு ஆடைகள் கூட அத்திவரதருக்கு மாற்றப்படுகிறது. மஞ்சள் நிறம் அவருக்கு பிடித்த நிறம் என்பதால், நிறைய பக்தர்கள் மஞ்சள் நிற பட்டு ஆடையை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அதேபோல், அத்திவரதருக்கு செய்யப்படும் வண்ண வண்ண பூ அலங்காரத்திற்கு பூக்களும் காணிக்கையாகவே வருகின்றன. நிறைய பூக்கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து பூக்களை வாரி வழங்குகிறார்களாம்.
Related Tags :
Next Story