ஆன்மிகம்

திருப்பதியை விஞ்சிய காஞ்சிபுரம் + "||" + Kanchipuram surpasses Tirupati

திருப்பதியை விஞ்சிய காஞ்சிபுரம்

திருப்பதியை விஞ்சிய காஞ்சிபுரம்
தென் இந்தியாவில் அதிக பக்தர்கள் வரும் கோவிலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி விளங்கி வருகிறது.
தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை திருப்பதிக்கு வந்து, ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகேயுள்ள காஞ்சி புரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அத்திவரதரை தரிசிக்க இப்போது தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், திருப்பதியிலேயே கூட்டம் குறைந்துவிட்டதாம். திருப்பதிக்கு தினமும் செல்லும் பக்தர்களில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இப்போது அந்த பக்தர் களில் பெரும் பகுதியினர் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்து விடுவதால், இங்கு கட்டுக் கடங்காத கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. கடந்த 22-ந் தேதி வரை 30½ லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வார நாட்களில் தினமும் 1½ லட்சம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அது 2½ லட்சமாக உயருவதாகவும் கோவிலில் உள்ள அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

அதை வைத்து பார்க்கும்போது, 48 நாட்களிலும் சேர்த்து 65 லட்சத்துக்கும் குறைவில்லாத வகையில் பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடைசியாக 1979-ம் ஆண்டு அத்திவரதர் காட்சி தந்தபோது 10 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பக்தர்களின் வருகை இந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.