இந்த வார விசேஷங்கள்; 27-8-2019 முதல் 2-9-2019 வரை


இந்த வார விசேஷங்கள்; 27-8-2019 முதல் 2-9-2019 வரை
x
தினத்தந்தி 27 Aug 2019 1:36 PM GMT (Updated: 27 Aug 2019 1:36 PM GMT)

27-ந் தேதி (செவ்வாய்) * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.

* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாய் காட்சியளித்தல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கமல வாகனத்தில் திருவீதி உலா.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்

* மாத சிவராத்திரி.

* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு வெள்ளை சாத்தி வெள்ளிக் குதிரையிலும் பவனி.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் வீதி உலா.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலக் காட்சி. மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (வியாழன்)

* போதாயன அமாவாசை.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரத உற்சவம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரம், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலக் காட்சி.

* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருவீதி உலா.

* உப்பூர் விநாயகர் விருட்ச வாகனத்தில் பவனி.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் உலா, மாலை கஜமுகாசூரன் சம்ஹாரம்.

* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (வெள்ளி)

* அமாவாசை.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னைமர கிருஷ்ண அலங்காரம், இரவு புஷ்ப தண்டியில் தவழும் கண்ணனாய் காட்சியருளல்.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

31-ந் தேதி (சனி)

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.

* உப்பூர் விநாயகர் திருக்கல்யாண உற்சவம்.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

* கீழ்நோக்கு நாள்.

1-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* இஸ்லாமிய வருடப் பிறப்பு.

* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் பவனி.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை ரத ஊர்வலம், சந்தன காப்பு, யானை வாகனத்தில் உலா.

* உப்பூர் விநாயகர் கோவிலில் ரதம்.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (திங்கள்)

* விநாயகர் சதுர்த்தி.

* முகூர்த்த நாள்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல், பூத மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜ அலங்காரம், மாலை அமிர்த மோகினி அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் உலா.

* சமநோக்கு நாள்.

Next Story