இந்த வார விசேஷங்கள் : சகல சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்


இந்த வார விசேஷங்கள் : சகல சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 12 Nov 2019 4:07 PM GMT (Updated: 12 Nov 2019 4:07 PM GMT)

12-11-2019 முதல் 18-11-2019 வரை

12-ந் தேதி (செவ்வாய்)

பவுர்ணமி விரதம்

சகல சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்.

திருஇந்துளூர் பரிமளரங்க ராஜர் அனுமன் வாகனத்தில் வீதி உலா.

மாயவரம் கவுரிமயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் பவனி.

குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.

உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

திருப்போரூர் முருகப்பெரு மானுக்கு அபிஷேக- ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

கார்த்திகை விரதம்.

திருஇந்துளூர் பரிமளரங்க ராஜர் யானை வாகனத்தில் பவனி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை, விராலிமலை ஆகிய தலங்களில் முருகப்பெரு மான் புறப்பாடு கண்டருளல்.

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் தங்கரதக் காட்சி.

கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

திருஇந்துளூர் பரிமளரங்க ராஜர் திருக்கல்யாண வைபவம், இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி ஊர்வலம்.

மாயவரம் கவுரிமயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் பவனி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

மாயவரம் கவுரிமயூரநாதர் கோவிலில் ரத உற்சவம்.

திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

சமநோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

மாயவரம் கவுரிநாதர் கடைமுக தீர்த்தம்.

திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் ஆலய ரத உற்சவம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

இன்று கருட தரிசனம் நன்மை தரும்.

மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.

மாயவரம் கவுரிமயூரநாதர் ஆலயத்தில் முடவன் முழுக்கு.

சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு.

திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் சப்தாவரணம், புஷ்ப யாகம்.

பத்ராச்சலம் ராமபிரான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.

சமநோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

திருப்பாப்புலியூர் ஆலயத்தில் சங்காபிஷேகம், வெள்ளி இந்திர விமானத்தில் சுவாமி பவனி.

திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.

அவிநாசியப்பர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவ காட்சி.

மேல்நோக்கு நாள்.

Next Story