ஆன்மிகம்

கருட வழிபாடும்.. திதிகளும்.. + "||" + Garuda worship .. Titikalum ..

கருட வழிபாடும்.. திதிகளும்..

கருட வழிபாடும்.. திதிகளும்..
காக்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் மகாவிஷ்ணு. இவருடைய வாகனமாக இருப்பவர் கருடன்.
காக்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் மகாவிஷ்ணு. இவருடைய வாகனமாக இருப்பவர் கருடன். இவர் ‘பெரிய திருவடி’ என்றும் புகழப்படுகிறார். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசிப்பவர்களுக்கு, அவர்களைப் பிடித்த தோஷங்கள் அனைத்தும் அகலுவதாக ஐதீகம். அதனால்தான் பலரும், வானத்தில் கருடனைப் பார்த்ததும் ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா..’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதைப் பார்த்திருப்போம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது. நவக்கிரகங்களினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்குபவராகவும் கருடன் திகழ்கிறார்.

இவரை எந்தத் திதிகளில் வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

* வளர்பிறை பிரதமை: கண் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் அகலும்.

* தேய்பிறை பிரதமை: வறுமை நீங்கி, குபேர சம்பத்து ஏற்படும்.

* வளர்பிறை திருதியை: சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

* வளர்பிறை சஷ்டி: செவ்வாய் தோஷம் அகலும்.

* வளர்பிறை சப்தமி: சூரிய பகவானால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

* வளர்பிறை சதுர்த்தி: விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

* வளர்பிறை நவமி: கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

* தேய்பிறை நவமி: மரண பயம் நீங்கும்.

* தேய்பிறை தசமி: குரு தோஷம் விலகும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* வளர்பிறை துவாதசி: புதன் தோஷம் விலகும். அறிவாற்றல் பெருகும்.

* தேய்பிறை துவாதசி: மகாவிஷ்ணுவின் நெஞ்சில் குடியிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

* அமாவாசை: ஆண் குழந்தை பிறக்கும் வரம் கிடைக்கும்.

* பவுர்ணமி: மகாலட்சுமியின் அம்சமான பெண் வாரிசு பிறக்கும் யோகம் வாய்க்கும்.

வானத்தில் வட்டமிடும் கருடனை நாம் அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே வைணவத் தலங்களில் அருளும் கருடாழ்வாரை வணங்கி, அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம்.

தஞ்சை தொல்காப்பியன்