இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:49 AM GMT (Updated: 24 Dec 2019 10:49 AM GMT)

24-12-2019 முதல் 30-12-2019 வரை

24-ந் தேதி (செவ்வாய்)

 மாத சிவராத்திரி.

 சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

 சமநோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)

 கிறிஸ்துமஸ் பண்டிகை.

 அமாவாசை.

 அனுமன் ஜெயந்தி.

 நாமக்கல், சுசீந்திரம் ஆலயங்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை.

 திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

 ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.

 சமநோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)

 மதுரை கூடலழகர் சன்னிதியில் பெரியாழ்வாா் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி, பரத்துவ நிர்ணயம் செய்தருளல். கருடோற்சவம்.

 திருவரங்கம் நம்பெருமாள், திருநெடுதாண்டகம், பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவில்களில் சுவாமி பவனி.

 சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

 சகல விஷ்ணு ஆலயங் களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான்பட்டர் திரு மாளிகை பச்சை பரப்பி, கடாசித்து பெரிய பெருமாள், கருடன் பட்டர் பிரான் திருப்பல்லாண்டு தொடக்கம்.

 ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

 கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

 கீழ்நோக்கு நாள்

28-ந் தேதி (சனி)

 திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.

 ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

 திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மனுக்கு திருமஞ்சன சேவை.

 திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை.

 மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு)

 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காலிங்க நர்த்தன திருக்கோலக் காட்சி.

 ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய், பல்லக்கில் கன்றால் விளா எறிந்த திருக்கோலக் காட்சி.

 மதுரை கூடலழகா், திருமோகூர் காளமேகப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

 மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

 சதுர்த்தி விரதம்.

 ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் -ரெங்கமன்னார், திருவரங்கம் நம் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.

 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்ட ராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.

 மேல்நோக்கு நாள்.

Next Story